வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எல்.வி.எம்.3-எம்.3 ராக்கெட்

by Staff / 26-03-2023 12:12:31pm
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எல்.வி.எம்.3-எம்.3 ராக்கெட்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் 'எல்.வி.எம்.3-எம்.3' ராக்கெட். இந்த எல்.வி.எம்3 - எம்3 ராக்கெட் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதிக எடையை தூக்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 'எல்.வி.எம்3-எம்3' என்ற ராக்கெட்டை வடிவமைத்தது. இதில் ஒன்வெப் இந்தியா-2க்கான 36 செயற்கைகோள்கள் பொருத்தபட்டு உள்ளது. இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட 36 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via