99 வயதில் உலக பணக்காரர் பட்டியலில் இந்தியர்

by Staff / 08-04-2023 02:09:30pm
99 வயதில் உலக பணக்காரர் பட்டியலில் இந்தியர்

ஃபோர்ப்ஸ் நிறுவனம் கடந்த 37 வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது. அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 9ஆவது இடம்பிடித்துள்ளார். கடந்தாண்டு 3ஆம் இடத்திலிருந்த கௌதம் அதானிக்கு, இம்முறை 24ஆவது இடமே கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் ஆனந்த் மஹிந்திரா உள்ள நிலையில், 99 வயதான அவரது மாமாவான கேசுப் மஹிந்திராவும் இணைந்துள்ளார். இதன்மூலம் இந்தியாவைச் சேர்ந்த மிக அதிக வயதான பில்லியனர் என்ற சாதனையை கேசுப் மஹிந்திரா படைத்துள்ளார்.

 

Tags :

Share via