ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம்

by Editor / 11-07-2021 05:12:26pm
ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று அதிமுக நிர்வாகிகள் உள்பட 900 பேருடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய தோப்பு வெங்கடாசலம், இனி தமிழகத்தினுடைய நிரந்தர முதலமைச்சர் அண்ணன் தளதியார் அவர்கள் தான். இந்த நிமிடத்திலிருந்து ஈரோடு மாவட்டத்தை தி.மு.க.வினுடைய அசைக்க முடியாத எஃக்கு கோட்டையாக்க சூளுரை ஏற்கிறோம். நாங்களெல்லாம் வந்து தான் தி.மு.க.,வை ஈரோடு மாவட்டத்தில் வளர்க்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. தி.மு.க., பெரிய ஆலமரம். அந்த ஆலமரத்திலே தேடி வந்த பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறீர்கள்.

எப்போது உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் ஈரோட்டில் 100 சதவிகித வெற்றியைப் பெற்று அதனை உங்களுடைய பொற்பாதங்களில் வைப்பது தான் எங்களுடைய வேலையாக இருக்கும். தூங்குகிற நேரத்தைத் தவிர கழகத்திற்கு உழைக்க தயாராக இருக்கிறோம். 905 அ.தி.மு.க., மற்றும் பல்வேறு அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்றைக்கு தங்களை தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதைப் போல, இது மணியோசை தான். தலைவர் அவர்களே, நீங்கள் எனக்கு ஒருமாத காலம் அவகாசம் கொடுத்தால், ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த 25 ஆயிரம் பேரை தி.மு.க.,வில் இணைத்துக் காட்டுகிறேன் என கூறினார்.

 

Tags :

Share via