சைபர் குற்றங்களில் தொடர்புடைய 19, 654 செல்போன் எண்கள் முடக்கம்

by Staff / 24-04-2023 12:26:54pm
சைபர் குற்றங்களில் தொடர்புடைய 19, 654 செல்போன் எண்கள் முடக்கம்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பழைய மோசடி செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குள் புதிய மோசடிகள் முளைத்து விடுகின்றன.இந்த மோசடிக்கு மூலதனமே செல்போன் எண்கள் தான். சைபர் மோசடி கும்பல் பல்வேறு செல்போன் எண்கள் மூலம் ஆசைவார்த்தைகளை அள்ளி விடுவது, லிங்குடன் கூடிய குறுந்தகவல் அனுப்புவது என்று அப்பாவி மக்களை மோசடி வலையில் சிக்க வைக்கின்றன.எனவே இதுபோன்ற 'சைபர் கிரைம்' மோசடி வழக்குகளில் சிக்கும் செல்போன் எண்களை முடக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய இணையதளம் உருவாக்கப்பட்டது.இதன் மூலம் சைபர் கிரைம் குற்றவாளிகளின் செல்போன் எண்களை இந்த இணையதளத்தில் 'சைபர் கிரைம்' போலீசார் பதிவேற்றம் செய்யலாம்.இந்த செல்போன் எண்கள் ஆய்வுக்கு பின்னர் முடக்கப்பட்டு வருகின்றன. இந்த இணையதளத்தில் தமிழ்நாடு 'சைபர் கிரைம்' போலீஸ் கூடுதல் டி. ஜி. பி. சஞ்சய்குமார், போலீஸ் சூப்பிரண்டுகள் தேவராணி, அசோக்குமார், ஸ்டாலின் ஆகியோரின் முயற்சியால் தமிழ்நாட்டில் நடைபெற்ற சைபர் கிரைம் குற்றங்களில் தொடர்புடைய 20 ஆயிரத்து 197 செல்போன் எண்களை முடக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.இதில் 19 ஆயிரத்து 654 செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழக 'சைபர் கிரைம்' போலீசார் அதிகமான செல்போன் எண்களை இந்த இணையதளத்தில் முடக்குவதற்கு பதிவேற்றம் செய்துள்ளனர்.

 

Tags :

Share via