பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

by Admin / 29-04-2023 09:49:16am
பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றும் விதமாக அவருக்கு கடலினில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கபடும் வேண்டும் என்று  தமிழ்நாடு அரசு அறிவித்தது. கடலில் பேனா நினைவுச் சின்னா 81 கோடி மதிப்பீட்டில் 134 அடி உயரத்திற்கு பிரம்மாண்டமானமுறையில் ஒரு பேனா சின்னத்தை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. கலைஞருக்காக கடற்கரை ஓரம் 2.23 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு கொண்டிருக்கின்ற நினைவிடத்திற்கு அருகிலேயே கடலில் இந்த பேனா சின்னம் அமைக்கப்பட மத்திய அரசினுடைய  கடற்கரை  நிர்வாக மண்டல ஆணையத்திடம் பொது பணித்துறை சார்பாக நினைவு சின்னத்திற்கு அனுமதி கேட்டு சுற்றுச்சூழல்  மதிப்புக்குழுவுக்கும்  தமிழக அரசு கடிதம் எழுதி இருந்தது. இது குறித்து  மத்திய  சுற்றுச்சூழல்  மதிப்பு நிபுணர் குழு புது தில்லியில் அதன் ஆலோசனை கூட்டத்தை கூட்டி விவாதித்து .  தமிழக அரசுக்கு  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு  ஆய்வு அறிக்கை அடிப்படையில் பேனா சின்னம் அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.  பேனா  நினைவுச்  சின்னம்  நடுக்கடலில் விரைவில் நடைபெறுவதற்கு இன்னும் ஒழுங்குமுறை மண்டலம் அனுமதி அளித்தால்  தமிழக அரசு  நினைவு சின்னத்திற்கான வேலையை  தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம் நடுக்கடலில் பேனா  நினைவுச்சின்னம் அழைப்பதற்கு தொடர்பாக தமிழக அரசு பொது மக்களிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அதை மத்திய அரசிற்கு அனுப்பியதன் மூலமாக இந்த அனுமதி விரைவில் கிடைத்துள்ளது

 

Tags :

Share via