இபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு கண்டனம்

by Staff / 24-05-2023 04:20:02pm
இபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு கண்டனம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 9 நாள் சுற்றுப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்று உள்ளார். தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்க முதல்வர் சென்று உள்ளார். இந்நிலையில் முதல்வர் இன்ப சுற்றுலா சென்றுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்துள்ள கண்டன அறிக்கையில், அதிமுக சொத்துக்குவிப்பு வழக்குகளை மறைக்க, தமிழக முதல்வரின் 9 நாள் பயணத்தை இபிஎஸ் கொச்சைப்படுத்தி உள்ளார் என விமர்ச்சித்துள்ளார்.

 

Tags :

Share via