டெல்லியில் பலத்த மழை

by Editor / 19-07-2021 05:01:35pm
டெல்லியில்  பலத்த மழை



டெல்லியில் திங்கள்கிழமை இடி, மின்னலுடன் இடைவிடாமல் 2 மணி நேரம் பலத்த  மழை பெய்தது.
குர்கான், பகதுர்கர், மானேசர், பரிதாபாத், காசியாபாத், இந்திராபுரம், நொய்டா, தாத்ரி மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய இடங்களில் பெய்த கன மழையால் அந்த பகுதி முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.இதன் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
டெல்லியில் பருவமழை தொடங்கியுள்ளது. இடைவிடாது பெய்து வரும் மழையால் தலைநகர் டெல்லியில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் இடைவிடாது பெய்து வரும் மழையால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
டெல்லியில் ஊரடங்கு தளர்வுகளால் சாலைகளில் வாகனங்கள் அதிக அளவில் ஓட தொடங்கி உள்ளன. இந்த நிலையில் திடீரென பெய்த கனமழையால் நகர் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நகரின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
முன்னதாக உத்தரப்பிரதேசம், அரியானா மற்றும் ராஜஸ்தான், டெல்லி ஆகிய இடங்களில் இன்று பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மிதமான மழை முதல், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
குருஷேத்ரா, பானிப்பட்டு, சோனிபட், தாருலா, மீரட், ராம்பூர், மொரதாபாத், அலிகார், ஆல்வார் உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் பருவ மழை கடந்த செவ்வாய்க்கிழமை துவங்கிய நிலையில் வியாழக்கிழமையும் நேற்றும் மிதமான மழை பெய்த நிலையில் 2 மணி நேரம் கன மழை கொட்டியது.

 

Tags :

Share via