இன்று 800 அரசு சிறப்பு பேருந்துகள்இயக்கம்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 800 அரசு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை காரணமாக இன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட இடங்களிலிருந்து முக்கிய ஊர்களுக்கும், பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், மொத்தம் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.Tags :