நூறு ரூபாய்க்கு இரண்டு கிலோ தக்காளி போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்ற மக்கள்.

by Editor / 04-07-2023 10:28:23am
நூறு ரூபாய்க்கு இரண்டு கிலோ தக்காளி போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்ற மக்கள். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது ரூபாய் 100 முதல் 135 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர் தமிழகத்திற்கு தக்காளி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ள நிலையில் இன்று முதல் சென்னை உட்பட பல இடங்களில் நியாய விலை கடைகள் மூலம் கிலோ ரூபாய் 60-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சேகர் என்ற வியாபாரி மினி டெம்போ வாகனத்தில் தக்காளி ஏற்றி வந்து இரண்டு கிலோ தக்காளி நூறு ரூபாய்க்கு விற்று வருகிறார் எதை அறிந்த பொதுமக்கள் அங்கு சென்று போட்டி போட்டுக் கொண்டு வாங்கி  செல்கின்றனர். தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்வது குறித்து விசாரித்த பொழுது 25 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி 1100 ரூபாய்க்கு வாங்கி அதனை இரண்டு கிலோ தக்காளி நூறு ரூபாய்க்கு விற்பதன் மூலம் அதிக அளவில் விற்பனை நடைபெறுவதாகவும் குறைந்த லாபம் கிடைத்தாலும் நாள் ஒன்றுக்கு 30 பெட்டி அளவிற்கு தக்காளி விற்கப்படுவதால் ரூபாய் 3000 லாபம் கிடைக்கும் என்று கூறும் வியாபாரி குறுகிய நேரத்தில் தக்காளி விற்று தீர்ந்து விடுவதால் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.
 

Tags :

Share via