வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலை

by Staff / 09-07-2023 05:13:12pm
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலை இமாச்சல பிரதேசத்தில் மிரட்டும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பியாஸ் ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், ஆற்றை ஒட்டியிருந்த தேசிய நெடுஞ்சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, சாலையிலேயே ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. மறுபுறம் தொடர் மழையால் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் மண்டி-குலு இடையிலான சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.<br /> &nbsp;
 

Tags :

Share via

More stories

Logo