டாஸ்மாக் திறப்பு நேரத்தில் மாற்றமில்லை - அமைச்சர்

by Staff / 12-07-2023 05:13:05pm
டாஸ்மாக் திறப்பு நேரத்தில் மாற்றமில்லை - அமைச்சர் டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரத்தில் மாற்றம் இல்லை என மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல நண்பகல் 12:00 மணிக்கு தொடங்கி இரவு 10.00 மணிக்கு மூடப்படும் என்று தெரிவித்தார். காலையிலேயே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என சர்ச்சை எழுந்த நிலையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். டாஸ்மாக் வியாபாரிகள் ஊதியம் குறித்து 18 சங்க நிர்வாகிகளிடம் பேசி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
 

Tags :

Share via