தமிழ்நாடு முழுவதும் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

by Editor / 01-09-2021 07:06:15pm
தமிழ்நாடு முழுவதும் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

தமிழ்நாடு முழுவதும் கோவிட் வழிமுறைகளை பின்பற்றி 9ம் வகுப்பு  முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன.

பிளஸ் 2 தேர்வுகள் மட்டுமே நடைபெற்றன. ஒன்று முதல் பிளஸ் 1 வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

பின்னர், 2020-2021 ஆம் கல்வியாண்டில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன.

கல்வித்தொலைக்காட்சியிலும் ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தினர்.

ஜனவரி மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் இரண்டாவது அலை பரவத் தொடங்கியது. ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது.

அரசு அமல்படுத்திய கடும் கட்டுப்பாடுகள் காரணமாக கரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.

எனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் 2021 செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டதும், மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும், சுகாதார நடவடிக்கைகளை கண்காணிக்கவும் 13 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via