டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது.

by Editor / 19-07-2023 08:12:09pm
டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது.

திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் தம்பிதுரை பங்கேற்பு,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி உள்ளிட்டோரும் பங்கேற்பு.நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில், அதிமுக சார்பில்  தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் பங்கேற்றுள்ளார்.அ.இ.அ.தி.மு.க மக்களவை தலைவராக நான் கலந்து கொண்டு சிறப்பித்த ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின் ஓ.பி.ரவீந்திரநாத் தனது ட்வீட்டர் பக்கத்தில், “இன்று (19.07.2023) மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் மாண்புமிகு பாதுகாப்பு துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் ஜி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் உடனான கூட்டத்தில் முக்கிய அம்சங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து அ.இ.அ.தி.மு.க மக்களவை தலைவராக நான் கலந்து கொண்டு சிறப்பித்தேன்” என தெரிவிவித்துள்ளார்.

 

Tags :

Share via