ஜம்மு காஷ்மீர் மாநில பெண்களின் கணவர்களுக்கும் வசிப்பிட சான்றிதழ்

by Editor / 21-07-2021 06:16:59pm
ஜம்மு காஷ்மீர் மாநில பெண்களின் கணவர்களுக்கும் வசிப்பிட சான்றிதழ்

 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சட்டப்படி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட பொழுது ஜம்மு-காஷ்மீர் மாநில பெண்களை திருமணம் செய்து கொண்ட வெளிமாநில ஆண்களுக்கு ஜம்மு-காஷ்மீர் வசிப்பிட சான்றிதழ் வழங்கப்படுவதில்லை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநில பெண்களை மணந்து கொண்ட வெளிமாநில கணவர்களுக்கு வசிப்பிட சான்றிதழ் வழங்குவது என்று இப்பொழுது யூனியன் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
யூனியன் பிரதேசத்தில் உள்ள தாசில்தார்களுக்கு  வெளி மாநில கணவர்களுக்கு வசிப்பிட சான்றிதழ் வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.திருமணத்தை உறுதி செய்யும் சான்றிதழில், பெயரில் கணவர்களுக்கு வசிப்பிட சான்றிதழ் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via