முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் 26 - ஆம் ஆண்டு நினைவு நாள். 

by Editor / 31-07-2023 12:29:25pm
முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் 26 - ஆம் ஆண்டு நினைவு நாள். 

 விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் தமிழக நிதி மின்சாரம் மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் தந்தையும், தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் தந்தையும் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சருமான தங்கப்பாண்டியன்  26 - ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,  தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள்  தமிழரசி, தளபதி, தங்கப்பாண்டியன், சீனிவாசன், காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
 

 

Tags :

Share via