-ஆகஸ்டு மாத ராசிபலன்கள்- 2023

by Admin / 02-08-2023 01:46:26pm
-ஆகஸ்டு மாத ராசிபலன்கள்- 2023

மேஷம் ராசி-ஆகஸ்டு மாத ராசிபலன்கள்- 2023

சூரியன் சுக ஸ்தானத்தில் இருப்பதால் அரசு வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பணிபுரியும் இடத்தில் ஆதரவு கிடைக்கும். சிறு தூரப் பயணங்களால் மாற்றம் ஏற்படும். திறமைக்குண்டான உயர்வு கிடைக்கும். செவ்வாய் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்களில் தாமதம் உண்டாகும். புதன் சுக ஸ்தானத்தில் இருப்பதால் நண்பர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். ஆடி 07முதல் புதன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். சுக்கிரன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வசீகரமான பேச்சுக்களின் மூலம் காரியசித்தி ஏற்படும். குரு ராசியில் இருப்பதால் சுபகாரிய பயணங்கள் கைகூடும். சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சனி லாப ஸ்தானத்தில் இருப்பதால் கமிஷன் பணிகளில் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகளால் நன்மை உண்டாகும். ராகு ராசியில் இருப்பதால் கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். கேது களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.

ரிஷபம் ராசி - ஆகஸ்டு மாத ராசிபலன்கள்- 2023

சூரியன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் திட்டமிடாத சில காரியங்கள் நடைபெறும். மனதிற்கு நெருக்கமானவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். மனதை குழப்பிய சில விஷயங்களுக்கு தெளிவு பிறக்கும். புதிய பயணங்களில் கவனம் வேண்டும். செவ்வாய் சுக ஸ்தானத்தில் இருப்பதால் புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத இடமாற்றங்கள் நேரிடலாம். புதன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் வித்தியாசமான சிந்தனைகளும், அதற்கான முயற்சிகளும் அதிகரிக்கும். ஆடி 07 முதல் புதன் சுக ஸ்தானத்தில் இருப்பதால் நினைத்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். தன சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுக்கிரன் சுக ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். உறவுகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குரு போக ஸ்தானத்தில் இருப்பதால் கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அமைதியுடன் இருக்கவும். சனி தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் உழைப்புக்கு உண்டான லாபம் கிடைக்கும். போட்டி, பந்தயங்களில் விவேகத்துடன் செயல்பட்டால் மேன்மை உண்டாகும். ராகு போக ஸ்தானத்தில் இருப்பதால் நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கேது சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் தைரியமாக சில காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

மிதுனம் ராசி-ஆகஸ்டு மாத ராசிபலன்கள்- 2023.

சூரியன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் இழுபறியான முயற்சிகள் கைகூடும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் காரியங்கள் நடைபெறும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். செவ்வாய் சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய வியூகங்கள் கைகொடுக்கும். புதன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆடி 07 முதல் புதன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். சுக்கிரன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் வித்தியாசமான சிந்தனைகள் மனதில் மேம்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குரு லாப ஸ்தானத்தில் இருப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். போட்டி, பந்தயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். சனி பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாகன பயணங்களில் மிதவேகம் நன்று. ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். கேது புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். சிந்தனைகளின் போக்கில் கவனம் வேண்டும்.கடகம் ராசி - ஆகஸ்டுமாத ராசிபலன்கள் -2023
சூரியன் ராசியில் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சுயதொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு மேம்படும். எதிலும் துரிதமாக செயல்படுவீர்கள். செவ்வாய் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் குவாரி சம்பந்தமான தொழில்களில் முன்னேற்றம் ஏற்படும். புதன் ராசியில் இருப்பதால் தொழிலில் முதலீடுகள் மேம்படும். கமிஷன் தொடர்பான துறைகளில் விவேகம் வேண்டும். ஆடி 07 முதல் புதன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். சுக்கிரன் ராசியில் இருப்பதால் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். குரு தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் அரசு பணிகளில் கவனத்துடன் இருக்கவும். உயர் அதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். சனி அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். ராகு தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். தனவரவுகள் சாதகமாக அமையும். கேது சுக ஸ்தானத்தில் இருப்பதால் விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம் ராசி-ஆகஸ்டு மாத ராசிபலன்கள் -2023

எதிலும் தன்னிச்சையாகச் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே..!!
சூரியன் போக ஸ்தானத்தில் இருப்பதால் உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். உடல் சூடு சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். செவ்வாய் ராசியில் இருப்பதால் எதிலும் முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். உறவினர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். புதன் போக ஸ்தானத்தில் இருப்பதால் உடனிருப்பவர்களால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். ஆடி 07 முதல் புதன் ராசியில் இருப்பதால் வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சுக்கிரன் ராசியில் இருப்பதால் மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். பெரியோர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். குரு பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் தனியார் துறையில் இருப்பவர்களுக்கு உயர்வு உண்டாகும். புதிய வீடு வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சனி களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் ஆடம்பரமான பேச்சுக்களையும், பிரமாண்டமான சிந்தனைகளையும் தவிர்ப்பது தெளிவை ஏற்படுத்தும். ராகு பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் வெளியூர் பயணங்களின் போது விழிப்புணர்வுடன் இருக்கவும். கேது சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் வழியில் விவேகத்துடன் செயல்படவும்.

கன்னி ராசி-ஆகஸ்டு மாத ராசிபலன்கள் -2023.


சூரியன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் புதுமையான சிந்தனைகளின் மூலம் மாற்றம் உண்டாகும். இலக்கியம், நாவல் சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். செவ்வாய் போக ஸ்தானத்தில் இருப்பதால் செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்பாராத சில அலைச்சல்களால் உடல் சோர்வு உண்டாகும். புதன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பிடித்த விஷயங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆடி 07 முதல் புதன் போக ஸ்தானத்தில் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டுப் பேசுவது புரிதலை மேம்படுத்தும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுக்கிரன் போக ஸ்தானத்தில் இருப்பதால் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பயனற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. விதண்டாவாத பேச்சுக்களால் மன வருத்தங்கள் நேரிடும். குரு அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் பணி நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். சனி சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். ராகு அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் மற்றவர்களின் பேச்சுக்களை நம்பி முடிவு எடுப்பதை தவிர்க்கவும். கேது குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் மற்றவர்களைப் பற்றி கருத்துகள் கூறுவதை குறைத்துக் கொள்ளவும்

துலாம் ராசி ஆகஸ்டு மாத ராசிபலன்கள் 2023.

சூரியன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் வீடு, மனைகள் வாங்குவது சார்ந்த எண்ணங்கள் கைகூடும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் படிப்படியாக விலகும். செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால் வியாபார பணியில் உயர்வு உண்டாகும். சீருடை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். புதன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆடி 07 முதல் புதன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட காலமாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு ஏற்படும். சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் கலை சார்ந்த விஷயங்களில் புரிதல் மேம்படும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரம் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். குரு களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். சகோதரிகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சனி புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் பணியில் இருந்த அலட்சியத்தன்மை குறையும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. ராகு களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் வாழ்க்கைத் துணைவரிடத்தில் அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். கேது ராசியில் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது

.விருச்சிகம் ராசி  ஆகஸ்டுமாத ராசிபலன்கள் 2023.

சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். தகவல் தொடர்புத்துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். காப்பீடு சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் சிறு தொழில் வியாபாரிகளுக்கு மேன்மை ஏற்படும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். ஆடி 07 முதல் புதன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் அலங்காரப் பொருட்களால் ஆதாயம் அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். குரு சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. சனி சுக ஸ்தானத்தில் இருப்பதால் ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் உண்டாகும். மனை விற்றல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். ராகு சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத சில தனவரவுகள் உண்டாகும். கேது போக ஸ்தானத்தில் இருப்பதால் இணையம் தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள்

.தனுசு ராசி ஆகஸ்டு மாத ராசிபலன்கள் 2023.

சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழல் உண்டாகும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் அதிகரிக்கும். செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் குழந்தைகளின் சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த விஷயங்களில் தெளிவு ஏற்படும். புதன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். ஆடி 07 முதல் புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் உத்தியோக பணிகளில் உயர்வு உண்டாகும். வாழ்க்கைத் துணைவர் பற்றிய புரிதல் மேம்படும். வியாபார பணிகளில் புதிய பாதைகள் புலப்படும். குரு புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் கைகூடும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சனி சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் வியாபார பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ராகு புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். கேது லாப ஸ்தானத்தில் இருப்பதால் ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளால் மனதில் அமைதி ஏற்படும்

.மகரம் ராசி  ஆகஸ்டுமாத ராசிபலன்கள் 2023.

சூரியன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் தற்பெருமை பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. மனதளவில் இருந்துவந்த தயக்கம் குறையும். எதையும் செய்ய முடியும் என்ற மனப்பக்குவம் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் சில உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இணையம் சார்ந்த துறைகளில் சிந்தித்துச் செயல்படவும். புதன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் நுட்பமான சில விஷயங்களை தெளிவாக புரிந்து கொள்வீர்கள். ஆடி 07 முதல் புதன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் உத்தியோக பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். இனம்புரியாத சில சிந்தனைகளால் தடுமாற்றம் ஏற்படும். சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் சிலருடைய சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். தொழில் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். குழப்பமான எண்ணங்களால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் உண்டாகும். குரு சுக ஸ்தானத்தில் இருப்பதால் புதிய ஆர்டர் மற்றும் ஒப்பந்தங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொது நலக்காரியங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். சனி குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் பேச்சுக்களில் கனிவு வேண்டும். பழமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். ராகு சுக ஸ்தானத்தில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். கேது தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வர்த்தக பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும்

கும்பம் ராசி -ஆகஸ்டுமாத ராசிபலன்கள் 2023..

சூரியன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். இனம்புரியாத சில சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் அமையும். செவ்வாய் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் வர்த்தக பணிகளில் விவேகம் வேண்டும். ஆடி 07 முதல் புதன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் திட்டமிட்டு செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பிரிந்து சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உயர் அதிகாரிகளால் ஒத்துழைப்பு மேம்படும். குரு சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சனி ராசியில் இருப்பதால் கட்டுமான பணிகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். நீண்ட தூர பயணங்களில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். ராகு சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் வியாபாரம் நிமிர்த்தமான மறைமுக போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். கேது பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் குலதெய்வ பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்

.மீனம் ராசி  மாத ராசிபலன்கள் 2023...
சூரியன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடம்பரமான சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. ஜாமீன் விஷயங்களில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் மலரும். செவ்வாய் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் கமிஷன் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். புதன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். ஆடி 07 முதல் புதன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் கலை சார்ந்த துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் மந்தமான சூழல் தோன்றி மறையும். சுக்கிரன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் மனதிற்கு நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோக பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். சில முடிவுகளில் எதிர்ப்புகள் அதிகரிக்கும். குரு குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத தனவரவுகளால் நன்மை ஏற்படும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சனி போக ஸ்தானத்தில் இருப்பதால் பயணங்களின் போது பேச்சுக்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். ராகு குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் சூழ்நிலைகளை அறிந்து வாக்குறுதிகளை அளிக்கவும். கேது அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும்.

..

 

Tags :

Share via