கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்

by Staff / 22-11-2022 11:32:15am
கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்


ஏர்டெல் நிறுவனம் ஹரியானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்தபட்ச மாதாந்திர ரிசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதன்படி இந்த மாநிலங்களில் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் ரூ.99ல் இருந்து ரூ.155-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ் 28 நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது சோதனை முறையில் இந்த கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், இந்த திட்டத்திற்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து இந்தியா முழுவதும் புதிய விலை மாற்றி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via