சவுதி அரேபியாவில் முதன் முறையாக பாதுகாப்பு பணிகளில் பெண் ராணுவப்படையினர்

by Editor / 24-07-2021 05:59:26pm
சவுதி அரேபியாவில்  முதன் முறையாக பாதுகாப்பு பணிகளில்  பெண் ராணுவப்படையினர்

 

சவூதி அரசு மெக்கா மற்றும் மதினா மசூதிகளின் பாதுகாப்பு பணிகளில் முதன்முறையாக பெண் ராணுவப்படையினரை பணியமர்த்திருக்கிறது. பழமைவாதம் வேரூண்டி இருக்கும் சவூதியில், இளவரசர் சல்மானின் அதிரடி நடவடிக்கைகள் பெண்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சவுதி அரேபியாவின் இளவரசரான முகமது பின் சல்மான் வரும் 2030ம் ஆண்டுக்குள் பழைய சமுதாய அடிப்படைவாத கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய நவீன கட்டமைப்பு கொள்கைகளை உருவாக்க வேண்டும் என பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.

சவூதி அரசு இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மெக்காவில்ல் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே கடந்த ஏப்ரல் முதல் இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில் ராணுவ பெண்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சவூதி ராணுவத்தின் காக்கி நிற சீருடை பெண்களுக்கும் தரப்பட்டுள்ளது. முழங்கால் அளவிற்கு நீளமான மேல்சட்டையும் சற்றே தளர்வான கால் சட்டையுடன் கருப்பு வண்ணத்தில் தொப்பி மற்றும் முகத்தை மறைக்க துணி ஆகியவற்றை வீராங்கனைகள் அணிந்துள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பெண்கள் கம்பீரமாக காட்சியளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருவதால், இளவரசருக்கு பாராட்டு மழையும் குவிந்து வருகிறது .

 

 

Tags :

Share via