பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை மணிப்பூர் குறித்து அவைகளிலும் பேசவில்லை

by Staff / 08-08-2023 01:38:41pm
பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை  மணிப்பூர் குறித்து அவைகளிலும் பேசவில்லை

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் தற்போது நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி விவாதத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கௌரவ் கோகோய் எம்.பி. விவாதத்தை தொடங்கி பேசி வருகிறார். இந்நிலையில், பேசிய காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய், “வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஏன் செல்லவில்லை? மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்ற இரு அவைகளிலும் பேசவில்லை  என தெரிவித்துள்ளார். மேலும், மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கலவரம் கொழுந்து விட்டு எரிவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via