ஜப்பான் துருக்கியில் அதிகாலை நிலநடுக்கம்

by Staff / 11-08-2023 02:35:31pm
ஜப்பான் துருக்கியில் அதிகாலை நிலநடுக்கம்

ஜப்பானின் ஹொக்கைடோவில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. மேலும் துருக்கியில் இன்று காலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியாவில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபாத் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது.

 

Tags :

Share via