ஆசிய ஹாக்கி சாம்பியன் போட்டிஇந்திய அணி நான்காவதுமுறையாக கோப்பையை வென்றது.

by Admin / 13-08-2023 09:22:22am
 ஆசிய ஹாக்கி சாம்பியன் போட்டிஇந்திய அணி  நான்காவதுமுறையாக கோப்பையை வென்றது.

சென்னையில் ராதாகிருஷ்ணன்ஆசிய ஹாக்கி சாம்பியன் போட்டி நடந்தது. இப் போட்டியில், இந்திய அணியும் மலேசிய அணியும் மோதின. .மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .ஆசிய ஹாக்கி போட்டி கோப்பை இந்திய அணி பெறுவது இது நான்காவது முறையாகும். மலேசிய அணி வெள்ளி பதக்கத்தை வென்றது. பாகிஸ்தான் அணி இந்த தொடரில் ஐந்தாவது இடத்தையும் சீன அணி இறுதி இடத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.  போட்டியின் நிறைவாக பரிசளிப்பு விழாவில், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வழங்கினார் .இந்நிகழ்வில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் ,தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 ஆசிய ஹாக்கி சாம்பியன் போட்டிஇந்திய அணி  நான்காவதுமுறையாக கோப்பையை வென்றது.
 

Tags :

Share via