உணவகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 பேர் காயம்

by Staff / 13-08-2023 05:32:55pm
உணவகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 பேர் காயம்

ஓமன் நாட்டின் மஸ்கட் நகரை அடுத்த மபேலாவில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடி விபத்தின் தாக்கத்தால் சுற்றுப்புறத்தில் உள்ள பல வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக ராயல் ஓமன் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via