திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் கமல்ஹாசன்

by Staff / 14-08-2023 02:41:52pm
திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் கமல்ஹாசன்

2024 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக கமல்ஹாசன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தென் சென்னை தொகுதியை கமலுக்கு ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தொகுதியை அதிமுகவிடம் கேட்டு வாங்கி வெற்றி பெற்றாக வேண்டும் என பாஜக நினைக்கிறது. இதனால், கமல்ஹாசன் போன்ற மக்கள் செல்வாக்கு பெற்ற ஒருவர் கூட்டணி பலத்துடன் களமிறக்கப்பட்டால், வெற்றி உறுதி என திமுக தரப்பு நினைக்கிறது. கமல்ஹாசனும் சில மாதங்களாக திமுகவினரிடம் கொஞ்சம் நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via