வத்தல் வியாபாரியை வாழ்த்திய முதலமைச்சர்

by Staff / 17-08-2023 12:25:39pm
வத்தல் வியாபாரியை வாழ்த்திய முதலமைச்சர்

மதுரை தத்தநேரியை சேர்ந்த வத்தல் வியாபாரி ராஜேந்திரன் மதுரை மாநகராட்சி, திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள் ஆகியவற்றை 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் அமைத்து தந்துள்ளார். மேலும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை 71 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் அமைத்து தந்துள்ள நிலையில், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் வத்தல் வியாபாரி ராஜேந்திரனை வாழ்த்தியுள்ளார்.

 

Tags :

Share via