தமிழகத்தில் பரவலாக மழைக்கு  வாய்ப்பு..

by Editor / 22-08-2023 07:30:29am
தமிழகத்தில் பரவலாக மழைக்கு  வாய்ப்பு..

தமிழ்நாட்டில் பல பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் வரும் 28-ம் தேதி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னையில் திருக்கழுகுன்றம், திருப்போரூர், ஊத்துக்கோட்டை, வாலாஜாபாத், உத்திரமேரூர், மதுராந்தகம், அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், ஆற்காடு ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via