சந்திரயான் 3 - நடிகர் மாதவன் வாழ்த்து

by Staff / 23-08-2023 01:49:45pm
சந்திரயான் 3 - நடிகர் மாதவன் வாழ்த்து

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் இன்று (ஆக.23) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இது வெற்றிகரமாக நடந்து முடிந்தால் விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா 4வது இடத்தை பெறும். இது குறித்து நடிகர் மாதவன், “சந்திரயான்- 3 நிச்சயம் வெற்றி பெறும். என் வார்த்தையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அற்புதமான வெற்றியை பெறப்போகும் இஸ்ரோவுக்கும், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கும் எனது வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via