ரூ.21,000 ஆயிரமாக உயரும் கட்டணம்... பயணிகள் அதிர்ச்சி

by Staff / 03-10-2022 05:18:34pm
ரூ.21,000 ஆயிரமாக உயரும் கட்டணம்... பயணிகள் அதிர்ச்சி

துர்கா பூஜை, ஆயுதபூஜை, நவராத்திரி, மிலாடி நபி, தீபாவளி பண்டிகை என தொடர்ச்சியாக வருவதால் விமானத்தில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பயணிகள் வருகையால் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், வாரணாசி, ஐதராபாத் உள்ளிட்ட தடங்களில் கட்டணம் உயர்ந்துள்ளது. ரூ.5,000 வரை விற்கும் டெல்லி - பாட்னா விமான கட்டணம் தீபாவளியையொட்டி ரூ.8000ல் இருந்து ரூ.13,000 ஆக உயரும் என கூறப்படுகிறது.

பெங்களூரு - தர்பங்கா விமானக்கட்டணம் ரூ.21,000 என்றும், அதேபோல் மும்பை - தர்பங்கா விமான கட்டணம் ரூ.21,000 என உயர்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பண்டிகை நேரத்தில் விமான கட்டணம் உயர்த்தப்படுவதால் விமான பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

 

Tags :

Share via