பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது

by Admin / 06-10-2026 01:36:27am
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது

தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக மாநிலம் முழுவதும் இருந்து வந்த செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் மற்றும் தகுந்த பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் மாத சம்பளமாக 45 ஆயிரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக செவிலியர்களை நியமிக்கும் முறையை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை காவல்துறையினர் கட்டாயமாக கைது செய்தனர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது
 
Tags :

Share via

More stories

Logo