திமுக வேட்பாளரை வாக்கு சேகரிக்க விடாமல் திமுகவினரே விரட்டி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

by Editor / 08-04-2024 11:12:43pm
 திமுக வேட்பாளரை வாக்கு சேகரிக்க விடாமல் திமுகவினரே விரட்டி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தென்காசியில் திமுக உட்கட்சி மோதல் காரணமாக திமுக வேட்பாளரை வாக்கு சேகரிக்க விடாமல் திமுகவினரே விரட்டி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் ராணி ஸ்ரீ குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவர்  திமுக கூட்டணி கட்சிகளுடன் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரம் பகுதியில் வாக்கு சேகரிக்க கூட்டணி கட்சி தொண்டர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது திமுக உட்கட்சி பூசல் காரணமாக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாருடன் வந்த ஆதரவாளர்களுக்கும் உள்ளூர் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திமுக வேட்பாளரை வாக்கு சேகரிக்க விடாமல் அங்கிருந்து துரத்தி அனுப்பினர். 
திமுக உட்கட்சி மோதல் காரணமாக திமுக வேட்பாளரையே வாக்கு சேகரிக்க விடாமல் திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : திமுக வேட்பாளரை வாக்கு சேகரிக்க விடாமல் திமுகவினரே விரட்டி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share via