செஸ் டைபிரேக்கர் சுற்று - வரலாறு படைப்பாரா பிரக்ஞானந்தா

by Staff / 24-08-2023 12:10:57pm
செஸ் டைபிரேக்கர் சுற்று - வரலாறு படைப்பாரா பிரக்ஞானந்தா

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா - நார்வேயின் கார்ல்சனுடன் மோதினார். இரண்டாவது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது. முதல் மற்றும் 2ம் சுற்று டிரா ஆனதால் இன்று (ஆகஸ்ட் 24) டை பிரேக்கர் சுற்று நடைபெறுகிறது. இப்போட்டியில் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடி வருகிறார். இந்நிலையில், பிரக்ஞானந்தா வெல்ல வேண்டும் என ‘ஜெயிச்சுடு மாறா’ போன்ற மீம்ஸ் உருவாக்கப்பட்டு இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது.

 

Tags :

Share via