முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி

by Staff / 28-08-2023 12:33:13pm
முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து ஆண்டு நிறைவு பெற்று, இன்று 6வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, திமுக இளைஞரணி செயலாலரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கையாம் நம் தி.மு.கழகத்தின் தலைவராக மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்து ஆறாம் ஆண்டில் நம்மையெல்லாம் வழிநடத்தவுள்ளார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு விடியலை ஏற்படுத்த அயராது உழைப்போம்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via