உழவர் சந்தைகளில் 238 டன் காய்கறிகள் 73.26 லட்சத்திற்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

by Editor / 24-11-2022 08:11:15am
உழவர் சந்தைகளில் 238 டன் காய்கறிகள் 73.26 லட்சத்திற்கு  விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, எடப்பாடி, இளம் பிள்ளை, மேட்டூர், ஜல கண்டாபுரம், ஆத்தூர், தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி பகுதிகளில்   உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தைகளில் வழக்கமான நாட்களில் நடக்கும் வியாபாரத்தைவிட, அமாவாசை நாட்களில் வழக்கத்தைவிட கூடுதலாக காய்கறிகள் விற்பனையாகும்.

 இந்நிலையில் நேற்று கார்த்திகை மாத அமாவாசையையொட்டி 11 உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி கடைகளில் அதிகளவிலான விற்பனை நடந்ததுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் 1,020 விவசாயிகள் கொண்டு வந்திருந்த காய்கறிகள்.  73 லட்சத்து 26 ஆயிரத்துக்கு விற்பனையாகியுள்ளது.இதனை 53,298 நுகர்வோர் வாங்கி சென்றுள்ளனர்.  இதில் அதிகபட்சமாக  ஆத்தூர் உழவர் சந்தையில்  202 விவசாயிகள் கொண்டு வந்திருந்த 45 டன் காய்கறிகள் 13.36 லட்சத்திற்கும், 

சேலம் மாநகர் சூரமங்கலம் உழவர் சந்தையில் 203 விவசாயிகள் கொண்டு வந்திருந்த 39 டன் காய்கறிகள் 12.56 லட்சத்திற்கும்.,தாதகாப்பட்டி உழவர் சந்தையில் 188 விவசாயிகள் கொண்டு வந்திருந்த 39 டன் காய்கறிகள் 13.23 லட்சத்திற்கும், அம்மாபேட்டை உழவர் சந்தையில் 85 விவசாயிகள் கொண்டு வந்திருந்த 18 டன் காய்கறிகள் 5.82 லட்சத்திற்கும் விற்பனை என சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் 238 காய்கறிகள் சுமார் 73.26 லட்சத்திற்கு விற்பனையாகி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

 

Tags :

Share via