அம்பானிக்கும், அதானிக்குமான ஆட்சி தான் பா.ஜ.க ஆட்சி - கனிமொழி

by Staff / 29-03-2024 12:13:45pm
அம்பானிக்கும், அதானிக்குமான ஆட்சி தான் பா.ஜ.க ஆட்சி - கனிமொழி

அம்பானிக்கும், அதானிக்குமான ஆட்சி தான் பா.ஜ.க .ஆட்சி என்று  தி.மு.க. எம்..பி. கனிமொழி விமர்சித்துள்ளார். கோவையில் துடியலூர் பகுதியில் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது , பா.ஜ.க .ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை. ஏழை விவசாயிகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்கிறது. மக்களவைத் தேர்தலில் நிச்சயமாக பா.ஜ.க. ஆட்சிக்கு வராது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி சிக்கல்கள், குளறுபடிகள் தீர்க்கப்படும். பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நிலையைஉருவாக்க வேண்டும் என்று பேசினாா்.. 

 

Tags :

Share via