அமெரிக்க ஹெலிகாப்டரை கைப்பற்றிய தலிபான்கள்...

by Admin / 31-08-2021 04:12:55pm
அமெரிக்க ஹெலிகாப்டரை கைப்பற்றிய தலிபான்கள்...



காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் விட்டுச்சென்ற சினூக் ஹெலிகாப்டர்களை தாலிபான்கள் கைப்பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.
 
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை முற்றிலும் வெளியேற்றிய பிறகு, காபூல் விமான நிலையத்தை தலிபான்கள் கைப்பற்றினர். அப்போது காபூல் விமான நிலையத்தை சுற்றி ஆய்வு செய்த தாலிபான்கள் அங்கு அமெரிக்கா ராணுவத்தால் விட்டு செல்லப்பட்ட சினூக் ஹெலிகாப்டர்களை கைப்பற்றினர்.

செங்குத்தாக மேலே எழும்பும் திறன் கொண்ட சினூக் ஹெலிகாப்டர் பல்வேறு ராணுவச் சரக்குகளை  எளிதில் மிகவும் உயரமான இடங்களுக்கு சுமந்து செல்லும் வல்லமை பெற்றது.
 
ஏற்கெனவே ஏராளமான துப்பாக்கிகள் அடங்கிய அமெரிக்க ராணுவ கிடங்கை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தற்போது சினூக் ஹெலிகாப்டர்களையும் கைப்பற்றியுள்ளனர்.

 

Tags :

Share via