கிருஷ்ணகிரியில் ராகுல் காந்தி போட்டியிட காங்கிரஸ் தீர்மானம்

by Staff / 28-08-2023 04:26:22pm
கிருஷ்ணகிரியில் ராகுல் காந்தி போட்டியிட காங்கிரஸ் தீர்மானம்

கிருஷ்ணகிரி காவேரிப்பட்டணத்தில், கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் காவேரிப்பட்டணத்தில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமையின் கீழ் கொண்டுவர வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும். கிருஷ்ணகிரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும். ராகுல் காந்தி பிரதமராக அனைவரும் ஒற்றுமையுடன் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை கிராம மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Tags :

Share via