கன்னியாகுமரி பாதிரியார் கைது

by Editor / 24-07-2021 04:35:40pm
கன்னியாகுமரி பாதிரியார் கைது

குமரி மாவட்டம் அருமனையில் நடந்த கூட்டத்தில் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை மோசமாகப் பேசியதோடு, பிற மதத்தினர் குறித்து வெறுப்பை விளைவிக்கும் கருத்துக்களையும் பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னைய்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 18ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் சிறுபான்மையினரின் உரிமை மீட்பு என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் பேசிய ஜனநாயக கிறிஸ்தவப் பேரவையைச் சேர்ந்த ஜார்ஜ் பொன்னையா என்ற பாதிரியார், தனது பேச்சில் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் குறித்து வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் பேசினார்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்திருப்பதாகவும், அது தொடர்ந்து மேலும் அதிகரிக்குமென்றும் பேசினார். அங்கிருந்த அதிகாரிகளையும் சுட்டிக்காட்டி அவதூறாகப் பேசினார் என்று குற்றம்சாட்டப்பட்டது.கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி குறித்தும் மத நோக்கில் சில கருத்துகளை வெளியிட்டிருந்தார் அவர்.

அவருடைய இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வெளியானதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஜார்ஜ் பொன்னையா மீது காவல்துறையில் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகள் புகார் அளித்தன. இதற்குப் பிறகு அவர் மீது மதங்களிடையே பிரிவினையை உருவாக்குதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் அருமனை போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர்.

அவர் கைது செய்யப்பட்டலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  அவர் தலைமறைவானார். அவரைப் பிடிப்பதற்கு ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவரது செல்போனை வைத்து, அவரை காவல்துறையினர் தேடினர். முடிவில் அவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடியில் தங்கியருப்பது தெரியவந்தது. அங்கு அவரைக் கைது செய்த காவல்துறையினர், கள்ளிக்குடி காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தனர். 

Tags :

Share via