இம்மானுவேல் சேகரனர் குருபூஜை விழா 4 தாலுக்காக்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

by Editor / 11-09-2023 08:53:33am
இம்மானுவேல் சேகரனர் குருபூஜை விழா  4 தாலுக்காக்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

இம்மானுவேல் சேகரனர் குருபூஜை விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் (சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி) 4 தாலுக்காக்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குடிமகன்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குருபூஜைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வரவுள்ளதால் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் 8000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : இம்மானுவேல் சேகரனர் குருபூஜை விழா

Share via