இந்தியாவை நாடும் எலான் மஸ்க்

by Staff / 14-09-2023 03:23:44pm
இந்தியாவை நாடும் எலான் மஸ்க்

இந்தியாவுக்கு எப்படியாவது தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தீவிரமாக இருக்கும் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், இந்த ஆண்டு, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் இருந்து சுமார் $1.9 பில்லியன் மதிப்பிலான வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே $ 1 பில்லியன் மதிப்புள்ள ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை இந்தியாவிலிருந்து பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், எலான் மஸ்கின் டெஸ்லா அடுத்தடுத்து பல கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via