இன்று விஸ்வகர்மா திட்டம், பிரதமர் நரேந்திர மோடியால் , விஸ்வகர்மா ஜெயந்தியில் தொடங்கி வைக்கப்படுகிறது.

by Admin / 17-09-2023 12:24:06am
இன்று விஸ்வகர்மா திட்டம், பிரதமர் நரேந்திர மோடியால் , விஸ்வகர்மா ஜெயந்தியில் தொடங்கி வைக்கப்படுகிறது.

இன்று விஸ்வகர்மா திட்டம், பிரதமர் நரேந்திர மோடியால் , விஸ்வகர்மா ஜெயந்தியில் தொடங்கி வைக்கப்படுகிறது. இத்திட்டம் பாரம்பரிய கைவினை தொழில் செய்வோர்களை பிற்போக்கான நிலைக்கு இட்டுச் செல்லுமா? மீண்டும் சாதிய குலத் தொழிலுக்கு வழிவகுக்குமா? என்கிற கருத்து மோதல்கள் வலுத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில்  இத்திட்டம் சரியானதுதானா ?என்றால் நிச்சயமாக..... தமிழகத்தில்,, அண்ணா பிறந்த தினத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட்டது .எவ்வாறு கிராமப்புறங்களில், அடித்தட்டு பொருளாதார நிலையில் இருக்கின்ற பெண்களுக்கு குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவி புரியுமோ,,,,,,,, இல்லை.. குடும்பத்திற்கு பாதுகாப்பாக அமையுமோ, அது போன்ற ஒரு நல்ல திட்டம் தான் விஸ்வகர்மா திட்டம்.

கிராமப்புறத்தில், காலம் காலமாக நலிந்த பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நலிந்திருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பதற்கோ, மாற்று வேலைக்கு அனுப்புவதற்கோ இயலாத குடும்பச் சூழலில் இருப்பவர்களுக்கு, பிரதமரின் இந்த விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிற ஒரு லட்ச ரூபாய் ...வட்டி இல்லாமல் கிடைக்க பெறுவதன் மூலமாக.. கிராம் சார்ந்து இருக்கக்கூடிய தொழில் செய்யும் கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு உருவாகும்.

கிராமப்புறத்தில் இருக்கின்ற நலிந்த பொருளாதார பின்னணி கொண்ட தொழில் புரிவோருக்கு வட்டி இல்லாமல் கிடைக்கப் படுகின்ற இந்த பணம் அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.. சின்னதாக, ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் ஒரு வியாபாரத்தை ஆரம்பிக்கலாம். இல்லை... தம் தொழிலுக்கு தேவையான தொழில் கூடத்தை வாடகைக்கு எடுத்து ,மூலப் பொருள்களை வாங்கி ,அதன் மூலமாக தங்களுடைய தொழிலை, இருக்கிற நிலையில் இருந்து, அடுத்த கட்டத்திற்கு எடுத்து ப் போவதற்கு இது ஒருநல் வாய்ப்பாக அமையும்.

இது ஒரு ஜாதிய நிலை தன்மையை உருவாக்கக் கூடியது என்று கருதுவோர்கள் கவனிக்க வேண்டியது ,என்னவெனில், குடும்ப பொருளாதாம்ர அந்த வீட்டு குடும்ப உறுப்பினர்களின் கல்வி, உணவு ,உடை, இருப்பிடம் சார்ந்த நிலையில் மாறுதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டாகும், கந்து வட்டி வாங்கி தொழில் செய்ய முடியாதவர்கள், இந்த திட்டத்தின் மூலமாக ஒரு லட்ச ரூபாயை முதலில் பெற்று, வட்டி இல்லாமல் அதை செலுத்திய பின்புமீண்டும், இரண்டு லட்ச ரூபாயை குறைந்த வட்டி விகிதத்தில் பெற்று,  தங்களுடைய தொழிலை, அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்துப் போவதற்கு மத்தியஅரசு செய்யக்கூடிய ஒரு நல்ல திட்டமாகவே,, இந்த கைவினை தொழில் புரிவோா்  வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

 சமூக- சாதிய கட்டமைப்பில் ,பொருளாதாரம், வளர.. வளர  சாதிய நெருக்குதல்களும் அதன் பிற்போக்கு தன்மைகளும் நலிவடைந்த சமுதாயத்தை தூக்கி நிறுத்தும் என்பதை ஆங்கில கல்வி முறை நமக்கு நிரூபித்து இருக்கிறது.

கிராமத்தில்,சாதியத் தொழில் செய்யக்கூடிய குடும்பத்தின் வீட்டுப் பிள்ளைகள் பள்ளி படிப்பை தொடர்வதற்கும் ,அடுத்தடுத்து தங்கள் வாழ்வியலை வளர்த்துக் கொள்வதற்குமான வாய்ப்புகள்......... ,இதில், இருப்பதாகவே பல்வேறு சமூக சிந்தனையாளர்கள் தெரிவிக்கின்றார்கள். 

இந்தியாவிற்கு வராமல், காரல் மார்க்ஸ்,  நாளிதழில் செய்திகளின் அடிப்படையாகக் கொண்டு எழுதிய கட்டுரைகள்குறிப்பிடும் இந்தியாவைப் பற்றி பொழுது ,இந்தியா பெரும் வளர்ச்சி பெறாமல் இருப்பதற்கும் சிதறுண்டு போகாமல் இருப்பதற்கும் ஜாதிய கட்டமைப்பு ஒரு காரணமாக இருக்கிறது என்று சொன்ன கருத்தை இங்கு நாம் அவதானிக்க வேண்டும்.

உலகம் முழுவதும் இன- ஜாதிய வேறுபாடுகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. அமெரிக்கா போன்ற உச்சபட்ச வளர்ச்சி அடைந்த நாட்டில் கூடகருப்பினத்த வரை ஏன்? கருப்பினகர்ப்பிணிப் பெண் என்று கூடபாா்க்காத அமெரிக்க இனவெறி தலைதூக்கியதை மறந்திட முடியுமா.?.படிக்க சென்ற இந்திய மாணவியை காா் ஏற்றிக்கொன்று கொக்காித்தவனை மறந்திட முடியுமா?..இதுபோன்ற  கொடூரங்களை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம் .இன- ஜாதி முரண்பாடுகளும் அதை அடிப்படையாகக் கொண்டு தோன்றும் பூசல்களும் சண்டைகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. காலம் காலமாக இருக்கின்ற ஒரு சமூக கட்டமைப்பில் , ஜாதியை அரசியலால் வேரறுக்க முடியுமா ?என்றால் ,அது கேள்வி குறிதான். பொருளாதாரத்தில் வலிமை படைத்த நாட்டில் கூட இன வேறுபாட்டை தவிர்க்க முடியாத பட்சத்தில்,வளமான பொருளாதாரம் பின்னணி இல்லாமல், உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கின்ற இந்தியாவில், எப்படி அதை சாத்தியப்படுத்த முடியும் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. ஆக ,ஒவ்வொரு குடும்பமும் தங்களுடைய உழைப்பின் வழியாக மேன்மை அடைய வேண்டும்எனில், அவர்களுக்கு சுயசார்பு பொருளாதார வலு இருக்க வேண்டும். அந்த வலு உருவாக வேண்டும் என்கிற எண்ணத்தோடு தான் இந்த விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக நாம் கருத வேண்டும். எந்த ஒரு திட்டமும் முதலில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவது இயல்புதான். மக்களினுடைய நலம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, ஒவ்வொரு ஆளும் கட்சியும் ,ஒவ்வொரு திட்டங்களை கொண்டு வந்து கொண்டு தான் இருக்கின்றன

. அந்தத் திட்டங்களினுடைய பயன்கள் நீண்ட காலம் கடந்த பிறகே அதனுடைய உண்மை தன்மை வெளிப்படும் .அதனால் ,ஏழை கைத்தொழில் புரிபவர்களை காப்பாற்றி கரை சேர்க்க வேண்டியது மத்திய- மாநில அரசுகளின் கடமை

.தங்களுடைய திட்டம் தான் சிறப்பானது என்று எந்த அரசும் மாறு தட்டிக் கொள்ளாமல் ,இது மக்களுக்கான திட்டம் . என்று வரவேற்க வேண்டும். கட்சி வேறுபாடு அற்று, ஜனநாயகக் கட்சிகள் தங்களுடைய பயணத்தை தொடங்க வேண்டும்

.கிராமப்புறத்தில் சாதாரண செருப்பு கைவினை பண்ணக்கூடிய தொழிலாளினுடைய வாழ்க்கைத் தரம் மிகப் பெரிதாக வளர்ந்து விடவில்லை. மண்பாண்டம் செய்யக்கூடிய தொழிலாளர்களுடைய நிலையும் உயர்ந்திருக்கிறதாக கருதி விட இயலாது .ஆக, 18 தொழில்களை பிரதமர் தேர்ந்தெடுத்து, இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறார். இதில், பல்வேறு சமூகங்கள் இருந்தாலும், அந்தந்த சமூகம் செய்து வந்த ஆற்றல் மிக்க தொழில்களினுடைய நுட்பங்களை தொடர்ச்சியாக எடுத்து செல்வது உள்ளூர் பொருளாதாரம் வளர்ச்சிக்கும் வழிகோலும் .அந்த தொழிலாளர்களுடைய குடும்பமும் வளம் பெறும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதை சாதிய அரசியலாக பார்க்காமல் ,சமூகமேம்பாட்டிற்கான தொடக்க புள்ளியாக பாா்ப்போம்.

 

 

Tags :

Share via