தேர்தல் வாக்குறுதிகள்- அரசு வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா.எடப்பாடி பழனிசாமி கேள்வி

by Staff / 19-09-2023 11:54:02am
தேர்தல் வாக்குறுதிகள்- அரசு வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா.எடப்பாடி பழனிசாமி கேள்வி

தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், எந்தெந்த தேதிகளில், எந்தெந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டன என்ற விபரத்தை திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களை எளிதில் மறக்கடித்துவிடலாம்' – என்ற நம்பிக்கையுடன் திமுக, 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இருந்தே, நிறைவேற்ற முடியாத பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்று, 2019 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றியைப் பெற்றது. அத்தேர்தலின் போது, பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் 38 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு சாதித்தது என்ன? குறிப்பாக, 2019 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில், தலைப்பு 3ல் – மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் அலுவலக மொழி; தலைப்பு 6ல் ஈழத் தமிழர் நலன் தலைப்பில் பல வாக்குறுதிகள்; தலைப்பு 7ல் தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழும் அயல் நாடுகளில் தகுதி வாய்ந்த தமிழர்களை இந்திய தூதர்களாக நியமிக்க வலியுறுத்தல்; தலைப்பு 8ல் கச்சத்தீவு பிரச்சனை; தலைப்பு 16ல் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம்; தலைப்பு 20ல் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் வாயு விலை குறைப்பு;

 

Tags :

Share via