பீட்சாக்களை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்ட டிரம்ப்

by Staff / 22-09-2023 12:18:58pm
பீட்சாக்களை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்ட டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில் பிரச்சாரத்தை இப்போதே தொடங்கியுள்ளனர். அந்தவகையில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் புதுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில், அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தனது ஆதரவாளர்களுக்கு பீட்சாக்களை விநியோகித்துள்ளார். குடியரசு கட்சி சார்பில் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் அவர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். பார் ஒன்றில் தனது ஆதரவாளர்களுக்கு பீட்சாக்களை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

Tags :

Share via