அதிமுக மற்றும் பாஜக நீண்ட தூரம் விலகிச் சென்ற நிலையில் மீண்டும் இவர்களை இணைக்க முடியுமா? டாக்டர் கிருஷ்ணசாமி.

by Editor / 30-09-2023 11:55:56pm
அதிமுக மற்றும் பாஜக நீண்ட தூரம் விலகிச் சென்ற நிலையில் மீண்டும் இவர்களை இணைக்க முடியுமா? டாக்டர் கிருஷ்ணசாமி.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,
கிராம சபை கூட்டங்களில் அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் அதற்காக முயற்சியாக பொதுமக்களுக்கு கடிதங்கள் எழுதி முன்னெடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.

மேலும்காவிரி விவகாரத்தில் நீர்ப்பாசன துறை அமைப்பு துரைமுருகன் சவுடால்  விட்டுக்கொண்டு வீண் வசனம் பேசி வருகிறார். திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் பேசி சட்ட ரீதியான தண்ணீரை காவிரியில் இருந்து பெற்று தர வேண்டும். ஆனால் திமுக அரசியல் லாபத்திற்காகவும் ஆட்சி லாபத்திற்காகவும் செயல்பட்டு வருகிறது. ஆனால் கர்நாடகாவில் வேறு ஏதேனும் ஆட்சியில் இருந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்கள்.தமிழக முதல்வர் கூட்டணியை மனதில் வைத்துக் கொண்டு  தமிழகத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது எனவும் கூறினார்.

பாஜக அதிமுக கூட்டணி விரிசல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பக்கூடிய சூழலில் இந்த வகையான விரிசல் என்பது ஒரு ஆதங்கத்தை ஏற்படுத்தியது. இரண்டு கட்சிகளும் நீண்ட தூரம் விலகி சென்று விட்டனர்.அந்த வகையில் மீண்டும் இவர்களை இணைக்க முடியுமா என்ற  நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நேற்றைய தினம் தூய்மை பணியாளர் நோயாளிக்கு தையல் போட்ட விவகாரம் பூதாகரமான நிலையில் இதனை மாவட்ட நிர்வாகம் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆட்சியர்களும், அமைச்சர்களும் விளம்பரத்திற்காக மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளாமல் இச்சம்பவம் குறித்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

Tags : டாக்டர் கிருஷ்ணசாமி.

Share via