பொதிகை எக்ஸ்பிரஸ்,வைகை, கோவை எக்ஸ்பிரஸ் கால அட்டவணை அக்டோபர் 1 முதல் மாற்றம்

by Editor / 01-10-2023 12:04:31am
பொதிகை எக்ஸ்பிரஸ்,வைகை, கோவை எக்ஸ்பிரஸ் கால அட்டவணை அக்டோபர் 1 முதல் மாற்றம்

சென்னை - செங்கோட்டை - சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை - செங்கோட்டை இடையே இதுவரை டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்பட்டு வந்தது. தற்பொழுது இந்தப் பகுதியில் இந்த ரயிலுக்கு மின்சார எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதால் கால அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி செங்கோட்டை - சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் (12662) மதுரையிலிருந்து இரவு 09.55 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 09.45 மணிக்கு 10 நிமிடம் முன்னதாக புறப்படும். மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (12661) மதுரையிலிருந்து அதிகாலை 04.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை 04.30 மணிக்கு 15 நிமிடம் முன்னதாக புறப்படும். மேலும் மதுரை - சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் (12636) மதுரையிலிருந்து காலை 07.10 மணிக்கு பதிலாக காலை 06.40 மணிக்கு 30 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூர் - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12635) மதுரைக்கு இரவு 09.15 மணிக்கு பதிலாக இரவு 09.30 மணிக்கு வந்து சேரும். மதுரை - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் (16722) மதுரையிலிருந்து காலை 07.25 மணிக்கு பதிலாக காலை 07.00 மணிக்கு 25 நிமிடம் முன்னதாக புறப்படும். மதுரை - சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638) மதுரையிலிருந்து இரவு 09.35 மணிக்கு பதிலாக இரவு 09.20 மணிக்கு 15 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். மதுரை - விழுப்புரம் எக்ஸ்பிரஸ் (16868) மதுரையிலிருந்து அதிகாலை 04.05 மணிக்கு பதிலாக அதிகாலை 03.35 மணிக்கு 30 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். இந்த கால அட்டவணை மாற்றம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது.

 

Tags : பொதிகை எக்ஸ்பிரஸ்,வைகை, கோவை எக்ஸ்பிரஸ் கால அட்டவணை அக்டோபர் 1 முதல் மாற்றம்

Share via