மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது - அண்ணாமலை

by Staff / 01-10-2023 03:15:55pm
மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது - அண்ணாமலை

மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'கட்சியை வலுப்படுத்துவதே எனது நோக்கம். கூட்டணி முடிவை தேசிய தலைமை மேற்கொள்ளும். மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது. நான் யாரிடமும் அனுசரித்து செல்ல மாட்டேன். இளைஞர்கள் அரசியலில் புது புரட்சிக்காக காத்திருக்கிறார்கள். 2024-ல் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 25 சீட்டுக்கு மேல் வெற்றி பெறும். நான் முழு நேர அரசியல்வாதி கிடையாது. முதலில் நான் விவசாயி. கல்வீச கல்வீச மரம் வளரத்தான் செய்யும்' என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo