முழு அடைப்பு போராட்டம்: விசிக ஆதரவு.

by Staff / 10-10-2023 01:44:29pm
முழு அடைப்பு போராட்டம்: விசிக ஆதரவு.

சென்னை: டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகா அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. விவசாய சங்கள் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தவுள்ளன. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு விசிக முழு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via