எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் தலைவர் - எஸ்.பி.வேலுமணி

by Staff / 17-10-2023 01:57:21pm
எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் தலைவர் - எஸ்.பி.வேலுமணி

எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் தலைவர்; கோவை மக்கள் இபிஎஸ் முதலமைச்சராக வரவேண்டும் என்று தான் வாக்களித்தார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'இபிஎஸ் தலைமையிலான கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களையும் பெறும். அதிமுகவின் ஏக்நாத் சிண்டே என்று என்னை விமர்சனம் செய்து சமூகவலைதளங்களில் பரப்புவது திமுக தான். எப்படியாவது அதிமுகவை பிளவு படுத்திவிட வேண்டும் என்ற நோக்கில் திமுக ஐடி விங் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதிமுகவினரை பிரிக்க முடியாது, எப்போதும் நாங்கள் பிரிய மாட்டோம்' என்றார்.

 

Tags :

Share via