பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை - எடப்பாடி பழனிசாமி

by Staff / 17-10-2023 04:22:17pm
பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை - எடப்பாடி பழனிசாமி

பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என மக்களிடம் எடுத்து சொல்லுங்கள் என அதிமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், கட்சியின் 52-வது ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அவர், தேர்தல் பணிகளில் மாவட்ட செயலாளர்கள் தலையீடு இருந்தால் நேரடியாக புகாரளியுங்கள். நிறைய கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளன. பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களிடம் எடுத்து சொல்லுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via