திருநெல்வேலிக்கு  சிறப்பு ரயில்கள்

by Editor / 19-10-2023 10:00:24pm
திருநெல்வேலிக்கு  சிறப்பு ரயில்கள்

சென்னை எழும்பூர் திருநெல்வேலி இடையே துர்கா பூஜை பண்டிகை கால சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் திருநெல்வேலி சிறப்பு ரயில் (06043) அக்டோபர் 20 அன்று இரவு 10.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 09.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06044) திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 24 அன்று மாலை 05.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
 

 

Tags : திருநெல்வேலிக்கு  சிறப்பு ரயில்கள்

Share via