நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் - காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்

by Staff / 30-10-2023 02:30:47pm
நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் - காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக முன்னிலை படுத்தப்படுவார் எனக் கூறி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கூட்டணியில் புதிய விவாதத்தை தொடக்கி வைத்துள்ளார். மேலும், இது குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் ராகுல் போட்டியிட்டால் மிகப்பெரிய வெற்றிப்பெறுவார். ராகுல் போட்டியிட்டால் திருச்சியில் நான் போட்டியிட மாட்டேன் எனக்கூறிய அவர், தமிழகத்தில் பாஜக ஒரு இடத்திலாவது வெற்றி பெறுகிறதா என்பதை பார்ப்போம் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via