மத்திய அமைச்சர் மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

by Staff / 08-04-2024 01:36:14pm
மத்திய அமைச்சர் மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தனது சொத்து விவரம் அடங்கிய வேட்பு மனுவுடன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அந்த பிரமாணப் பத்திரத்தில் ரூ.36 கோடி சொத்துக்கள் மட்டுமே இருப்பதாக அவர் கூறினார். ஆனால், ராஜீவ் சந்திரசேகரின் சொத்து மதிப்பு ரூ.8,000 கோடி என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

 

Tags :

Share via